Welcome to V Tamil News ..... VTamilNews.com என்பது பொதுமக்களுக்கு உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் விளையாட்டு, வர்த்தகம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.
spot_img

ATM கார்ட் இல்லாமல்.. UPI ஆப்ஸ் மூலம் ATM இல் இருந்து பணம் எடுப்பது எப்படி? சூப்பர் tips தெரிஞ்சுக்கோங்க..

Published :

ATM கார்டு (ATM card) அல்லது டெபிட் கார்டு (Debit Card) இல்லாமலும் இந்தியாவில் உள்ள மக்கள் இப்போது ATM இயந்திரங்களில் (ATM machine) இருந்து பணத்தை (Cash) எடுத்து வருகின்றனர். இந்த புதிய CARDLESS CASH WITHDRAWAL (ICCW) செயல்முறையை மக்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் உங்களுக்கு சொல்லித்தரப் போகிறோம். இந்த பதிவை முழுமையாக 2 நிமிடம் படித்து முடித்துவிட்டால், ATM கார்டு help இல்லாமல் இனி நீங்கள் ATM மையங்களில் இருந்து எளிமையாக இனி பணம் எடுத்துக்கொள்ள முடியும்.

withdraw money from ATM through UPI

இந்தியாவில் இருக்கும் மக்கள் இப்போது அதிகமாக கூகிள் பே (Google Pay), போன்பே (PhonePe) உள்ளிட்ட பல யுபிஐ (UPI) ஆப்ஸ்களை உபயோகப்படுத்தி வருகின்றனர். யுபிஐ (UPI) ஆப்ஸை பயன்படுத்தும் மக்கள் இனி அதே UPI ஆப்ஸை பயன்படுத்தி ATM இயந்திரங்களில் இருந்து கேஷ் எடுத்துக்கொள்ளும் புதிய UPI-ATM சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இண்டர்ஆப்பரபிள் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக்கொள்ளும் சேவை (Interoperable Cardless Cash Withdrawal) என்றும் அழைக்கப்படுகிறது.

withdraw money from ATM through UPI
withdraw money from ATM through UPI

UPI ஆப்ஸ் மூலம் ATM (ATM machine) இல் இருந்து பணம் எடுப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ்:

இனி இந்தியாவில் இருக்கும் BANK வாடிக்கையாளர்கள் UPI சேவையின் மூலம் ATM களில் இருந்து CASH எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்தச் சேவை பல்வேறு பங்குபெறும் வங்கிகளின் ATM களில் தற்போது பயன்படுத்த கிடைக்கிறது. இந்த வகையான கார்டுலெஸ் ATM பரிவர்த்தனைகளுக்கு, உங்களிடம் UPI ஆப்ஸுடன் (UPI Apps) இயங்க கூடிய ஒரு ஸ்மார்ட்போன் (Smartphone) மட்டும் வைத்து இருந்தால் போதுமானது மக்களே.

நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) UPI வாயிலாக இயக்கப்பட்ட Cash Withdrawal முறைக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இது யூசர்கள் டெபிட் கார்டுகளை எடுத்துச் செல்லாமல் Cash எடுப்பதற்கு வழிவகுத்துள்ளது. Card வைத்து பணம் எடுத்தது போன்ற அதே முறையை இந்த UPI முறையும் பின்பற்றுகிறது. ஆனால், QR கோட் ஸ்கேன் மற்றும் UPI PIN நம்பர் போன்ற அங்கீகாரங்களுடன் இது இயங்குகிறது.

ATM இல் இருந்து பணம் எடுப்பதற்கு UPI ஆப்ஸை எவ்வாறு பயன்படுத்துவது?

  • ATM டிஸ்பிளேவில் ‘UPI cash withdrawal’ என்ற விருப்பத்தை கிளிக் பண்ணவும்.
  • உங்கள் விருப்பத்திற்கு தகுந்த தேவையான தொகையை உள்ளிடவும்.
  • முக்கிய குறிப்பு இந்த UPI முறையை உபயோகப்படுத்தி ரூ.10,000 வரை மட்டுமே Cash எடுக்க முடியும்.
  • உங்கள் உள்ளீட்டு தொகை ரூ. 10,000-திற்குள் இருப்பது பார்க்கத்தக்கது.
  • ஏடிஎம் திரையில் QR கோட் காண்பிக்கப்படும்.
  • அதை உங்கள் phone ல் உள்ள UPI ஆப்ஸ் மூலம் ஸ்கேன் பண்ண வேண்டும்.
  • நீங்கள் பயன்படுத்தும் யுபிஐ ஆப்ஸின் PIN நம்பரை உள்ளிடவும்.
  • உங்கள் பணம் தானாக ஏடிஎம் இயந்திரத்தில் உள்ளே இருந்து எடுத்துக்கொள்ள வெளியே அனுப்பப்படும்.
See also  OPPO Reno12 Pro ஹேண்ட்ஸ்-ஆன் ரிவ்யூ: AI திறன்களுடன் பிரமிக்க செய்யும் டிசைன், நீடித்த ஹார்ட்வேர் சேர்கிறது!
withdraw money from ATM through UPI 1
withdraw money from ATM through UPI

முக்கிய குறிப்பு: UPI – ATM பரிவர்த்தனையை (Translation) செயல்படுத்த சுமார் 30 வினாடிகள் வரை ஆகலாம். எனவே கொஞ்சம் தாமதம் உண்டானால் பீதி அடைய வேண்டாம். காத்திருந்து, (Debit) டெபிட் மற்றும் (ATM Card) ஏடிஎம் கார்டு உதவியில்லாமல் (Cash) பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய சேவையை பயன்படுத்துவதால் என்ன பயன்களை மக்கள் அனுபவிக்க முடியும்? இந்த புதிய சேவை, கார்டு இன்றி பணம்(Cash) எடுக்கும் குறிப்பிடத்தக்க வசதியை அளிக்கிறது.

ஏடிஎம் கார்டு (ATM card) அல்லது டெபிட் கார்டு (Debit Card) போன்ற பிஸிக்கல் அட்டைகளின் தேவையை விலக்குகிறது. UPI இயங்குதளத்தை ஆதரிக்கும் பெரும்பாலான வங்கிகள் (Banks) மற்றும் ஏடிஎம்களில் (ATM machine) இப்போது இந்த சேவையை நீங்கள் அணுகலாம். கூடுதலாக, ஒரு புதிய கணக்கைத் திறந்த பிறகும் உங்கள் டெபிட் கார்டை (Debit Card) நீங்கள் பெறவில்லை என்றால், இந்தச் சேவையைப் பயன்படுத்தி நீங்கள் பணத்தை (Cash) எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய சேவை பற்றி எல்லோரும் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது.

கையில் ஏடிஎம் கார்டு (ATM card) அல்லது டெபிட் கார்டு (Debit Card) இல்லை என்றாலும், எளிமையாக ஸ்மார்ட்போனில் (Smartphone) உள்ள UPI ஆப்ஸ்களை பயன்படுத்தி, மக்கள் அவர்களின் அவசரத் தேவைக்கு பணத்தை ஏடிஎம் இயந்திரங்களில் (ATM machine) இருந்து எடுத்துக்கொள்ளலாம்.

RELATED ARTICLES

சமீபத்திய செய்திகள்