Welcome to V Tamil News ..... VTamilNews.com என்பது பொதுமக்களுக்கு உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் விளையாட்டு, வர்த்தகம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.
spot_img

மாசம் ரூ.2100 கோடி லாபத்தை ஈட்டிய இன்போசிஸ்.. நம்பிக்கை வீணாகவில்லை..!!

Published :

பெங்களூரு: இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமாக திகழும் இன்போசிஸ், 2024 முதல் 25 நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள காலாண்டில் ரூ.6,368 கோடி நிகர லாபம் பதிவு செய்திருக்கிறது. இது கடந்த வருடம் இதே காலாண்டை ஒப்பிடும் போது 7.1சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ரூ.7,975 கோடி நிகர லாபம் பெற்றிருந்த இந்நிறுவனம், ஜூன் காலாண்டில் 20.1% வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. இருப்பினும், ஜூன் காலாண்டில் இன்போசிஸ் வருவாய் ரூ.39,315 கோடியுடன் வருடாந்திர அடிப்படையில் 3.6 சதவீதம் வளர்ச்சியும், காலாண்டு அடிப்படையில் 3.7 % உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாப கணக்கு நடப்பு நிதியாண்டில் 20 முதல் 22% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிலையான நாணய மதிப்பீட்டில் 2024 முதல் 25 நிதியாண்டில் வருவாய் 3-4% வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக இன்போசிஸ் கூறியுள்ளது.

Infosys made profit Rs.2100 crore
Infosys made profit Rs.2100 crore

இது பற்றி பேசிய இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக், “நிதியாண்டின் ஆரம்பமே சிறப்பாக அமைந்துள்ளது. வலுவான வளர்ச்சி, செயல்பாட்டு லாப விரிவாக்கம், அதிகபட்ச பணப்புழக்கம் மற்றும் பெரிய ஒப்பந்தங்கள் போன்றவை இதற்குக் காரணம்” எனத் கூறினார்.

இன்போசிஸ் காலாண்டில் துறைவாரியான வளர்ச்சியைப் பார்த்தால், நிதி சேவைகள் துறை 27.5 %, ரீடைல் துறை 13.8 %, கம்யூனிகேஷன் துறை 12.1 %, எனர்ஜி, யுட்டிலிட்டி, ரெசோர்ஸ் மற்றும் சேவைகள் துறை 13.3 %, உற்பத்தித் துறை 14.7 %, உயர் தொழில்நுட்ப துறை 8 %, லைப்சைன்ஸ் துறை 7.3 % இக்காலாண்டில் வளர்ச்சி பெற்றுள்ளது.

சந்தை கணிப்புகளை கடந்து இன்போசிஸ் நல்ல ஒரு லாபத்தைப் பதிவு செய்துள்ளது. ஆனால் சக போட்டி நிறுவனங்களான ஹெச்சிஎல் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லாபத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

HCL டெக்னாலஜிஸ் 2024 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.4,257 கோடி அளவிலான லாபத்தைப் பெற்ற நிகர லாபம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போல டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சந்தை கணிப்புகளை கடந்து ரூ.12,040 கோடி அளவிலான லாபத்தைப் பதிவு செய்து 9சதவீதம் வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இவ்விரு நிறுவனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இன்போசிஸ் நிகர லாபம் ரூ.6,368 கோடி பதிவு செய்து 7.1சதவீதம் அளவிலான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்து உள்ளது.

இன்போசிஸ் பங்கு விலை இன்றைய வர்த்தகத்தில் 2 % உயர்ந்து ஒரு பங்கு விலை 1,764.95 ரூபாய் என்ற 52 வார உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

RELATED ARTICLES

சமீபத்திய செய்திகள்