Welcome to V Tamil News ..... VTamilNews.com என்பது பொதுமக்களுக்கு உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் விளையாட்டு, வர்த்தகம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.
spot_img

ஒரு நாளைக்கு இத்தனை மாம்பழங்களை தான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா..?

Published :

மாம்பழத்தை அளவாக சாப்பிடுவதால் உடல் எடையும் ரத்த சர்க்கரை அளவும் உயராது என இவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால், மிதமான அளவு தான் என்று எப்படி வரையறுப்பது? வாருங்கள் பார்ப்போம்.

how many mangoes to eat daily

கோடை காலம் வந்துவிட்டாலே பழங்களில் கிங்க் என கருதப்படும் மாம்பழ சீசன் களைகட்டிவிடும். இதன் சுவைக்கு எத்தனை மாம்பழம் வேண்டுமென்றாலும் சாப்பிடலாம். ஆனால் மாம்பழங்களை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்றும் ரத்த சர்க்கரை அளவு உடனே உயரும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

how many mangoes to eat daily
how many mangoes to eat daily

அதற்காக மாம்பழம் சாப்பிடாமலிருக்க முடியுமா என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. அதற்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? மாம்பழத்தை அளவாக சாப்பிட்டால் உடல் எடையும் ரத்த சர்க்கரை அளவும் கூடாது என இவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால், மிதமான அளவு என்று எப்படி வரையறுப்பது? வாருங்கள் பார்ப்போம்.

மாம்பழத்தின் நன்மைகள் : மாம்பழத்தில் ஆண்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை கூடுதலாக்கும் வைட்டமின் சி மற்றும் கண் பார்வை மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பயனாக இருக்கும் வைட்டமின் ஏ-வும் மாம்பழத்தில் அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான் இந்த பருவகால பழத்தை தவிர்க்க கூடாது என சொல்கிறோம்.

how many mangoes to eat daily (1)
how many mangoes to eat daily (1)

மாம்பழத்தில் வைட்டமின் B, E பொட்டாசியம் மற்றும் மாக்னீசியம் இருக்கிறது. மேலும் இதில் அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கு உதவியாக இருப்பதோடு மலச்சிக்கல் வராமலும் தடுக்க பயன்படுகிறது. தவிர, மாம்பழங்களில் டிரிப்டோபான் என்ற அமினோ ஆசிட் இருக்கிறது. இது நம் மனநிலையை சந்தோஷமாக்க பயன்படுகிறது.

ஒருவர் எத்தனை மாம்பழங்களை சாப்பிட்டால் நல்லது? அன்மையில் இன்ஸ்டாகிராம் பதிவில், ஊட்டச்சத்து நிபுணர் ஜூஹி கபூர் பேசும் போது, ஒரு பெரிய மாம்பழத்தின் 1/2 பங்கு அளவு அல்லது சுமார் 150 கிராம் சாப்பிடுவது சரியான அளவாக இருக்கும் என பரிந்துரைக்கிறார்.

how many mangoes to eat daily (2)
how many mangoes to eat daily (2)

மேலே குறிப்பிட்ட அளவு மாம்பழத்தில் தோராயமாக 125-150 கிராம் கலோரிகளை பெற்றிருக்கும் என்றும் மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் அதன் அளவை முக்கியமாக பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக,பெரிய மாம்பழம் ஒன்றில் 250-300 கிராம் கலோரிகள் இருக்கலாம்.

பொதுவாக பெரிய மாம்பழம் ஒன்று 300-350 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும். மேலும் அதில் 250-300 வரை கலோரிகள் இருக்கும். அப்படியென்றால், 300 கலோரி அளவுள்ள மாம்பழம் சாப்பிடுவது பலருக்கு ஆரோக்கியமுள்ளதாகவே இருக்கும். சராசரியாக ஒரு வயது வந்த நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,000 கலோரிகள் தேவையானால், ஒரு பெரிய மாம்பழம் அவர்களின் மொத்த தினசரி கலோரி தேவையில் தோராயமாக 15% இடத்தைப் பிடிப்பதாகவும் கபூர் விளக்கம் அளிக்கிறார்.

how many mangoes to eat daily (3)
how many mangoes to eat daily (3)

குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெனில், மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பாக லெமன் ஜுஸை குடிக்க வேண்டும் அல்லது ஊற வைத்த சியா விதைகள், ஊறவைத்த பாதாம் மற்றும் வாதுமை கொட்டை மாம்பழத்தோடு சேர்த்து சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

See also  தொப்பை குறைய இத ட்ரை செய்யுங்க..

அதெல்லாம் O K , மாம்பழம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா? எந்தவொரு பிஸிக்கல் ஆக்டிவிட்டிக்கு முன்பாக மாம்பழங்களை உட்கொள்வது சரியான நேரமாக இருக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கிறார்கள். பொதுவாக மாம்பழத்தை அப்படியே முழுதாக கடித்து உட்கொள்வது தான் நல்லது. அதற்குப் பதிலாக சர்க்கரை, பால் ஆகிய பிறப் பொருட்களுடன் சேர்த்து ஜுஸாகவோ அல்லது ஷேக் போல் செய்தோ உட்கொண்டால், அதன் ஊட்டச்சத்துகள் குறையலாம். ஆகவே எப்போது மாம்பழம் சாப்பிட்டாலும் அதை முழுதாக சாப்பிடுங்கள்.

RELATED ARTICLES

சமீபத்திய செய்திகள்