Welcome to V Tamil News ..... VTamilNews.com என்பது பொதுமக்களுக்கு உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் விளையாட்டு, வர்த்தகம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.
spot_img

நினைத்தாலே முக்தி கொடுக்கும் தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் இந்த பிரச்னை தீருமாமே!!!

Published :

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் ஆலயமானது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் சிறப்பாக அக்கினிக்கு என்று அமைக்கப்பட்டு உள்ள தலமாகவும் இது விளங்குகிறது. இத்தகைய அக்னி தலத்தில் ஈசன் நெருப்பு வடிவில் நின்று மலையாக குளிர்ந்த தலம் என்றும் சொல்லி வருகின்றனர்.

Girivalam in Tiruvannamalai
Girivalam in Tiruvannamalai

இந்த தலத்தில் தான் உமையவளுக்கு தனது இடது பக்கத்தை அழித்து அம்மையாக திகழ்ந்து வருவதாகவும் சொல்லி வருகின்றனர். மேலும் பல ஆலயங்களுக்கு சென்று பாவங்களை தீர்க்க வேண்டும் என்று எண்ணுபவர்களும், வாழ்வில் முக்தி அடைய வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த ஆலயத்தை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று சொல்லும் அளவிற்கு சிறப்பு கொண்ட ஆலயமாக திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

Girivalam in Tiruvannamalai

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி!! திருவண்ணாமலைக்கு சென்று வந்தாலே சிறப்பு!! என்று எல்லோரும் கூறுவது எந்த அளவிற்கு சிறப்பானதோ, அதே அளவிற்கு அங்கு சென்று திருவண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவது மிகவும் சிறப்பானது என்று சொல்லுகின்றனர். அங்கு அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரரை மனதில் நினைத்துக் கொண்டு பக்தர்கள் தேவையானவற்றை இறைவனிடம் கேட்டு மலையை சுற்றி கிரிவலம் வந்தால் வேண்டியவற்றை இறைவன் நடத்தி தருவார் என்று நம்பிக்கை இன்றளவிலும் இருந்து கொண்டுள்ளது.

This problem will be solved if we go to Girivalam in Tiruvannamalai (1)
This problem will be solved if we go to Girivalam in Tiruvannamalai (1)

மேலும் திருவண்ணாமலை அமைந்திருக்கும் இறைவனை நினைத்து கிரிவலம் சுற்றி வந்தால் தீராத நோயாக இருந்தாலும் அதில் பல காலங்களாக அவதிப்பட்டு கொண்டு வருபவர்கள் கூட நோயிலிருந்து விடுபட்டு சுகமான வாழ்வை வாழ்வார்கள் என்றும், அதிகம் பாவம் செய்தவர்களும் ஆலயத்துக்கு வந்து வழிபட்டு செல்வதினால் அவர்களின் பாவம் எல்லாம் நீங்கி மோட்சம் அடைவார்கள் என்றும் சொல்கின்றனர்.

இத்தகைய சிறப்புகள் கொண்ட திருவண்ணாமலை கிரிவலத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு அங்கு அமைந்திருக்கும் பூத நாராயணனை வழிபட்டு விட்டு ஆரம்பித்தால் கிரிவலத்தை எந்த ஒரு இடையூறும் இன்றி சிறப்பாக முடிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு இரட்டை விநாயகரையும், கோவில் கோபுரத்தையும் வணங்கிய பின் கிரிவலத்தை தொடங்கி சிவபெருமானை நினைத்தவாறு நடந்து கிரிவலத்தை முடிக்க வேண்டும். இந்த நிலையில் தற்பொழுது திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் மற்றும் ஒரு பிரச்சனை விலகும் என்று கூறப்பட்டுள்ள வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில்…

This problem will be solved if we go to Girivalam in Tiruvannamalai (2)
This problem will be solved if we go to Girivalam in Tiruvannamalai (2)

கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் அவற்றை சரி செய்ய வேண்டும் எனில் செவ்வாய்க்கிழமைகளில் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் மேற்கொள்ளலாம் என்றும், வங்கி கடன் மட்டுமல்லாமல் பூர்வ ஜென்மத்தில் யாரிடமாவது கடன் பட்டிருக்க வாய்ப்புகள் இருந்திருந்தாலும் கிரிவலத்திற்கு சென்றால் சரி செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.

See also  அமாவாசை தினத்தில் மறந்தும் இந்த காரியங்களை செய்து விட வேண்டாம்.. அறிவுறுத்தும் ஆன்மிகம்…

பொதுவாக கடன் என்பது பணத்தை மட்டும் சொல்வது கிடையாது, ஒருவர் ஜென்மத்தில் யாரிடமாவது கடன் பட்டிருந்தால் இந்த ஜென்மத்தில் ஒருவரிடம் பணத்தினை கொடுத்து ஏமாந்து விடும்பொழுது அதை பூர்வ ஜென்ம கணக்கில் அவரிடம் நாம் கடன் பட்டிருந்ததாகவும், அதனால்தான் தற்போது இந்த ஜென்மத்தில் பணத்தினை வாங்கிகொண்டு சென்றுவிட்டார் என்றும் கடன் கழிந்து விட்டது என்று முன்னோர்கள் சொல்லி வருவார்கள்.

This problem will be solved if we go to Girivalam in Tiruvannamalai (3)
This problem will be solved if we go to Girivalam in Tiruvannamalai (3)

இது போன்ற கடன்களும் பணமாக இருந்தாலும் சரி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டியது மற்றும் தெய்வங்களுக்கு செய்ய வேண்டியது, பித்ரு கடன், ரிஷி கடன் மற்றும் ருண விமோசனம் ஆகியவை செவ்வாய்க்கிழமைகளில் கிரிவலம் சென்றால் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது போல கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

Read Also : மந்திரங்களை 108 தடவை ஜபிக்க சொல்வதற்கு காரணம் என்ன? அதனால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

RELATED ARTICLES

சமீபத்திய செய்திகள்