Welcome to V Tamil News ..... VTamilNews.com என்பது பொதுமக்களுக்கு உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் விளையாட்டு, வர்த்தகம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.
spot_img

காமெடி கிங்க் கவுண்டமணி குறித்து பலருக்கு தெரியாத பத்து பொக்கிஷ செய்திகள்!

Published :

comedy king goundamani Ten tidbits

பெயர் காரணம் : இவரது இயற்பெயர் சுப்பிரமணி, தொடக்கத்தில் மேடை நாடகங்களில் கவுண்டர் கொடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட் என்பதால் கவுண்டர் மணியாக பிரபலமாகி பின்னாளில் அதுவே கவுண்டமணியாக மாறிப்போனது

கூச்ச சுபாவம் : நக்கல் மன்னன் கவுண்டமணி சிறுவயதில் யாரிடமும் அதிகமாக பேசமாட்டார். இதை நம்ப முடிகிறதா? தனது பால்ய காலத்தில் கவுண்டமணி கூச்ச சுபாவம் உள்ளவராகவே இருந்துள்ளார்.பிறகு நடிப்பிற்காக அதிலிருந்து விடுபட்டிருக்கிறார்

comedy king goundamani Ten tidbits
comedy king goundamani Ten tidbits

முதல் படத்தில் வசனம் கிடையாது

படத்திற்கு படம் பன்ச்களை தெறிக்கவிட்ட கவுண்டமணிக்கு முதல் படத்தில் வசனம் கிடையாது என்பது காலத்தின் நிலை, நாகேஷ் ஹீரோவாக நடித்த சர்வர் சுந்தரம் படம் கவுண்டமணியின் முதல் படம், அந்த படத்தில் கூட்டத்தில் ஒருவராக வந்து செல்லும் ரோலில் கவுண்டமணி தலைகாட்டி சென்றிருப்பார்

பிரேக் கொடுத்த திரைப்படம்

பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் கவுண்டமணிக்கு மிகப்பெரிய பிரேக் தந்தது கமல் ஹாசன், ரஜினிகாந்த் இரு பெரு துருவங்களையும் புகழின் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது அந்த படமே கவுண்டமணியையும் தமிழ் உலகுக்கு அடையாளம் காணச்செய்தது. அதில் அவர் பேசிய பத்த வெச்சிட்டியே பரட்ட என்ற வசனம் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

செந்திலுடன் முதல் படம்

1984 ஆம் வருடம் வெளியான வைதேகி காத்திருந்தாள் படத்தில் தன்னுடன் இன்னொரு காமெடியனை சேர்த்து கொண்டார் கவுண்டமணி. அதின் விளைவு இந்திய சினிமாவில் ஈடுயிணையில்லாத கூட்டணியாக கவுண்டமணி- செந்தில் எனும் சிரிப்பு சரித்திரம் உதயமானது.

சாதனை கூட்டணி

அவர் நடித்த 750 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் 450 க்கும் மேற்பட்ட படங்களில் செந்திலுடன் இணைந்து நடித்தார் கவுண்டமணி. இது ஒரு உலக சாதனையும் கூட இதன் மூலம் உலகபுகழ் வாய்ந்த Laurel & Hardy ஜோடிக்கு சமமாக பேசப்பட்டது இந்த இணை.

உறுதுணையாக இருந்த ரைட்டர்

கவுண்டமணியின் வெற்றி பயணத்தில் செந்திலுக்கு அடுத்தபடியாக உறுதுணையாக இருந்தது எழுத்தாளர் வீரப்பன். நாடக காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்த கவுண்டமணியும் செந்திலும் படங்களிலும் இணைந்தே நடிக்க வேண்டும் என விரும்பியவர் வீரப்பன் தான்.

கதாநாயகனாக நடித்த படங்கள்

என். எஸ். கே, எம். ஆர். ராதா, நாகேஷ் என காமெடியன்கள் கதாநாயகனாக நடிக்கும் டிரெண்டை கவுண்டமணியும் கடைபிடித்தார். விளையாட்டாக கதாநாயகனாக நடித்தவர் இதுவரை 10 க்கும் அதிகமான படங்களில் கதாநாயக பாத்திரம் ஏற்றுள்ளார். ஆனால் காமெடியனாக பார்த்த கவுண்டமணியை கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்கவில்லை.

ரசிகர் மன்றங்களுக்கு நோ

ஒரு கட்டத்தில் உச்ச நடிகர்களுக்கு இணையாக கவுண்டமணிக்கும் ரசிகர் பட்டாளம் உருவாகி இருந்தது. எனினும் தன்னை தேடிவரும் ரசிகர்களிடம் நான் பணத்திற்காக நடிக்கிறேன் நீங்கள் பொழுதுபோக்குக்காக பார்க்கிறீர்கள் என அறிவுரை சொல்லி அனுப்பி வைப்பார் கவுண்டமணி.

See also  இரண்டு நாளில் 3 திருமணங்கள்: அடுத்தடுத்து திருமண பந்தத்தில் சேர்ந்த பிரபலங்களின் வாரிசுகள்

சிந்திக்க வைத்த மகான்

பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி கவுண்டமணி பற்றி இயக்குனர் மணிவண்ணனின் பார்வை இதுவே. கல்வியறிவு இல்லை என்றாலும் உள்ளூர் பிரச்சனையில் ஆரம்பித்து உலக அரசியல் வரை அனைத்திலும் தீவிர பார்வை உடையவர் கவுண்டமணி. அதை அவ்வப்போது தனது காமெடியில் எடுத்து கொடுத்து சித்திக்க வைப்பார்.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா-நடாஷா விவாகரத்து போல சர்ச்சைக்குள்ளாகி விவாகரத்து பெற்ற இந்திய கிரிகெட் வீரர்கள்!

RELATED ARTICLES

சமீபத்திய செய்திகள்