Welcome to V Tamil News ..... VTamilNews.com என்பது பொதுமக்களுக்கு உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் விளையாட்டு, வர்த்தகம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.
spot_img

Augmentin 625 எதற்கு பயன்படுகிறது தெரியுமா.?

Published :

வி தமிழ் டிவி வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Augmentin 625 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை கீழ் கண்ட வருமாறு விவரித்துள்ளோம். மருந்து என்பது மிக முக்கியமான ஒன்றாக இருந்தாலும், அதனை பயன்படுத்துவதற்கு முன்பு அதை பற்றி தெரிந்துகொள்வது மிக மிக அவசியம். அதாவது, நாம் எல்லோருமே ஏதோவொரு உடல் நல பிரச்சனையால் அதற்கான மருந்துகளை பயன்படுத்தி வருவோம். ஆனால், மருந்தாக இருந்தாலும் ஒரு அளவு இருக்கிறது. அளவுக்கு அதிகமான மருந்து நம் உடலில் சேர்வதால் பல பக்கவிளைவுகளை உண்டாக்கக்கூடும்.

மருந்து சாப்பிடும் போது, அதனை பற்றிய விவரங்களை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அதாவது, மருந்தின் பயன்கள், பக்கவிளைவுகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அப்படி நீங்கள் Augmentin 625 மாத்திரையை பயன்டுத்துபவர்கள் என்றால் அம்மருந்து எதற்கெல்லாம் உதவுகிறது. அம்மருந்தினால் ஏதேனும் பக்கவிளைவுகள் உண்டாகுமா.? என்பதை தெறிந்துகொள்ளுங்கள்.

Augmentin 625 Tablet Uses in Tamil
Augmentin 625 Tablet Uses in Tamil

What is Augmentin 625 mg used For:

பயன்கள்: Augmentin 625 Tablet Uses in Tamil

Augmentin 625 மாத்திரை ஆனது, பெரும்பாலும் பாக்டீரியா தொற்று நோய்களுக்கு சிகிச்சை பெற பயன்படுகிறது. இம்மருந்து நுரையீரல், சுவாசக் குழாய், தோல், நடுத்தர காது, சைனஸ் மற்றும் சிறுநீர் பாதை போன்றவற்றின் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக தொண்டை அழற்சி, சுபவாதம், மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

பயன்படுத்தும் நேரம்:

பெரும்பாலும் இம்மருந்து காலை மற்றும் இரவு வேளையில் உணவு உட்கொண்ட பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பக்கவிளைவுகள்:

  • வயிற்றுப்போக்கு
  • காய்ச்சல்
  • குளிர் அல்லது காய்ச்சல் அறிகுறிகள்
  • இருமல்
  • சுவாசப்பிரச்சனை
  • தோல் எரிச்சல் மற்றும் தடித்தல்
  • மூட்டு வலி
  • மஞ்சள் காமாலை
  • குழப்பம் அல்லது பலவீனம்
  • அடர் நிற சிறுநீர்
  • உணர்வின்மை
  • தசை பலவீனம்

இது போன்ற பக்கவிளைவுகளை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நன்று.

மருந்து எவ்வளவு நேரம் நீடிக்கும்.?

Augmentin 625 மாத்திரை எடுத்துக்கொண்ட 1.5 முதல் 2 மணி நேரம் வரை இதன் விளைவு தொடரும்.

எத்தனை நாள் எடுத்து கொள்ளலாம்.?

Augmentin 625 மாத்திரையை அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக அதை பயன்படுத்தக் கூடாது.

See also  தொப்பை குறைய இத ட்ரை செய்யுங்க..
RELATED ARTICLES

சமீபத்திய செய்திகள்