Welcome to V Tamil News ..... VTamilNews.com என்பது பொதுமக்களுக்கு உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் விளையாட்டு, வர்த்தகம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.
spot_img

இரண்டு நாளில் 3 திருமணங்கள்: அடுத்தடுத்து திருமண பந்தத்தில் சேர்ந்த பிரபலங்களின் வாரிசுகள்

Published :

கோலிவுட்டில் அடுத்தடுத்து 3 திருமணங்கள் நடந்திருக்கிறது. 3 வாரிசுகளையும் பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் வாழ்த்தியுள்ளனர்.

3 weddings in two days

3 weddings in two days
3 weddings in two days

பிரேம்ஜி அமரன், ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் சார்லியின் மகன் அஜய் தங்கசாமி போன்றவர்களுக்கு அடுத்தடுத்து திருமணம் நடந்திருக்கிறது.

பிரேம்ஜி அமரன்​

premji
premji

பாடகரும், நடிகருமான பிரேம்ஜி அமரனுக்கும், அவரின் காதலியான இந்துவுக்கும் ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் சன்னதியில் திருமணம் நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட போடோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. சேலத்து பெண்ணான இந்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரேம்ஜி. வங்கியில் பணி செய்து வருகிறார் இந்து பிரேம்ஜி.

சார்லி மகன்​

Charle Son Wedding
Charle Son Wedding

நடிகர் சார்லியின் இளைய மகன் அஜய் தங்கசாமிக்கும், பெர்மிசியா டெமிக்கும் ஜூன் 9ம் தேதி சாந்தோம் தேவாலயத்தில் சிறந்த முறையில் திருமணம் நடந்தது. இதையடுத்து நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக்கூடையை அன்பளிப்பாக வழங்கினார் முதல்வர். மணமக்களை இசைஞானி இளையராஜாவும் வாழ்த்தினார்.

ஐஸ்வர்யா அர்ஜுன்​

Aishwarya Arjun Umapathy Ramaiah
Aishwarya Arjun Umapathy Ramaiah

ஜூன் 10ம் தேதி அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், அவரின் காதலரான உமாபதி ராமையாவுக்கும் திருமணம் நடந்தது. அர்ஜுன் சென்னை கெருகம்பாக்கத்தில் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் தான் ஐஸ்வர்யா, உமாபதியின் திருமணம் நடந்தது. முன்னதாக நிச்சயதார்த்தமும் அதே ஆஞ்சநேயர் கோவிலில் தான் நடைபெற்றது. ஐஸ்வர்யா, உமாபதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜூன் 14ம் தேதி நடக்கவிருக்கிறது.

​வெங்கட் பிரபு​

பிரேம்ஜி அமரனின் கல்யாணம் கோவிலில் வைத்து எளிமையாக நடந்துவிட்டது. அதில் குடும்பத்தாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றார்கள். இதையடுத்து திருமண வரவேற்பு விழாவிற்கு அனைவரையும் அழைப்பதாக கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு. பிரேம்ஜி, இந்துவின் திருமண வரவேற்பு விழா நடக்க போகும் தேதியை வெங்கட் பிரபு இதுவரை வெளியிடவில்லை.

அடுத்தடுத்து​

Varalaxmi Sarathkumar
Varalaxmi Sarathkumar

தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்களின் வாரிசுகளின் திருமணம் அடுத்தடுத்து நடந்திருக்கிறது. 2 நாட்களில் 3 பேருக்கு திருமணம் நடந்துள்ளது. இது அருமையா இருக்கே. ஒரே சிறப்பான விஷயமாக நடந்து வருகிறது என்கிறார்கள் ரசிகர்கள். அடுத்ததாக தன் காதலரான நிக்கோலய் சச்தேவை கல்யாணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார் வரலட்சுமி சரத்குமார். அவரின் திருமணம் தாய்லாந்தில் ஜூலை 2ம் தேதி நடக்கிறது.

See also  ஒரு மாதம் இயக்குனரிடம் பேசாமல் இருந்த விஜய்!.. கில்லி படப்பிடிப்பில் நடந்த அந்த சம்பவம்!.
RELATED ARTICLES

சமீபத்திய செய்திகள்