Welcome to V Tamil News ..... VTamilNews.com என்பது பொதுமக்களுக்கு உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் விளையாட்டு, வர்த்தகம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.
spot_img

பசியினால் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள்..!

Published :

எந்த ஒரு பிரச்சனைக்கும் கட்டாயமாக ஒரு தீர்வு உண்டு. அதுபோல பசி மற்றும் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு நிபுணர்கள் கூறும் ஈஸியான குறிப்புகள் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்:

Ways to control anger caused hunger

ஒரு சிலருக்கு பசி எடுத்து விட்டால் கூடவே கோபமும் வந்துவிடும். அவர்களை சமாளிப்பது பெரும் கஷ்டமாக இருக்கும். இது ஆங்கிலத்தில் ஹேங்கர் (Hanger) என்று சொல்லப்படுகிறது. பசி என்ற பொருள் கொண்ட ஹங்கர் (Hunger) மற்றும் கோபம் என்ற பொருள் கொண்ட ஆங்கர் (Anger) ஆகிய 2 வார்த்தைகளின் கலவையே இந்த ஹேங்கர்.

Ways to control anger caused hunger
Ways to control anger caused hunger

இது ஒரு நபரை மிக சுலபத்தில் எரிச்சல் அடைய செய்து விடும். ஆச்சரிய மூட்டும் விதமாக 2018 ஆம் வருடத்தில் ‘hangry’ என்ற சொல் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டு, பசியினால் உண்டாகும் கோபம் அல்லது எரிச்சல் அடைதல் என்று அர்த்தமிடப்பட்டது. ஒருவருடைய வயிறு காலியாக உள்ள பொழுது அவர் நேரடியாக தன்னுடைய நண்பர்கள், குடும்பம் அல்லது ஒரு பாவமும் அறியாதவர் அருகில் உள்ளவர்கள் மீது அந்த எரிச்சலை காட்டத் தொடங்குகின்றார்.

நாம் பசியோடு உள்ள பொழுது நமது உடலானது அதனை உணர்த்தும் வகையில் இயற்கையாக சிக்னல் ஒன்றை செலுத்தி உடலுக்கு உணவு தேவை என்பதை குறிப்பிடுகிறது. அதிக நேரம் பசியோடு இருப்பது ஒரு மோசமான அனுபவத்தை ஏற்படுத்தலாம். நாம் சாப்பிடும் உணவு நமது உணர்வு மற்றும் மன நலனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்குவதாக ஆய்வுகள் குறிப்பிடுகிறது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் கட்டாயமாக ஒரு தீர்வு உண்டு. அதுபோன்று பசி மற்றும் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு நிபுணர்கள் கூறும் எளிமையான குறிப்புகள் என்ன என்பதை இப்பொழுது இந்த பதிவில் பார்க்கலாம்

ஹேங்கர் உணர்வு உண்டாகும் பொழுது அதனை உடனடியாக கையாளும் விதமாக வீட்டில் எப்போதுமே புரோட்டின் பார், நட்ஸ் வகைகள் போன்றவை தயாராகஉள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றை நீங்கள் பணி செய்யும் மேஜை, உங்களுடைய கை பை அல்லது வாகனத்தில் வைத்து கொள்ளுங்கள். நேரத்திற்கு உங்களால் சரியாக சாப்பிட முடியாமல் இருக்கும் பொழுது இந்த தின்பண்டங்களை சாப்பிடுவது பயன்படும்.

சர்க்கரை நிறைந்த உணவு பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடனடியாக வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். ஆனால் அதே சமயத்தில் அவை உங்களை பசியோடு விட்டுவிடலாம். ஆகவே அவற்றிற்கு பதிலாக நட்ஸ், பழ வகைகள் மற்றும் புரோட்டின் அதிகம் உள்ள மீன், சிக்கன், முட்டைகள், டோஃபு, பீன்ஸ், தயிர் மற்றும் சீஸ் ஆகியவற்றை சாப்பிடுங்கள்.

See also  Augmentin 625 எதற்கு பயன்படுகிறது தெரியுமா.?

உங்கள் கண்பார்வையை கூர்மையாக்கும் எட்டு உலர் பழங்கள்.!

Ways to control anger caused hunger
Ways to control anger caused hunger

திடீரென்று மனநிலை மோசமாவதை உணர்ந்தாலோஅல்லது சோர்வாக இருந்தாலோ அது பசி மற்றும் கோபத்திற்கான ஆரம்ப எச்சரிக்கையாகும். இந்த அறிகுறிகளை எவ்வளவு சிக்கீரமாக நீங்கள் கண்டறிகிறீர்களோ அப்பொழுதே ஆரோக்கியமாக எதையாவது சாப்பிட்டுவிட்டு உங்களுடைய ஹேங்கர் உணர்வை கட்டுப்படுத்துங்கள்.

ஒரு சில நேரங்களில் தாகம் பசியை போல மாறுவேடம் போட்டு வரலாம். எனவே நீங்கள் பசியோடு உள்ள பொழுது அது தாகமாக இருக்க கூடும் என்று சந்தேகப்பட்டால் உடனடியாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். இது தற்காலிகமாக உங்களுடைய பசியை கட்டுப்படுத்த பயன்படும். ஆனால் அதனை தொடர்ந்து ஆரோக்கியமான மற்றும் வயிறு நிரம்பும் வகையில் உணவு சாப்பிடுவது முக்கியம்.

உங்களது அட்டவணையில் எந்த ஒரு காரணத்திற்காகவும் உணவை சமரசம் செய்ய கூடாது. உணவை நீங்கள் தவிர்த்தாலோ அல்லது தாமதப்படுத்தினாலோ உண்மையாக அதனால் உங்கள் உடலுக்கும், மன நலனுக்கும் ஆபத்து உண்டாகும். அதோடு உங்களுடைய ஹேங்கர் உணர்வு காரணமாக அடுத்தவர்களுக்கும் அது பிரச்சினையாக அமைகிறது.

இந்த ஹேங்கர் உணர்வு உண்டாவதற்கான மற்றொரு முக்கியமான காரணம் மன அழுத்தம். இதனை கையாளுவதற்கு நீங்கள் ஆழமான மூச்சுப் பயிற்சி, தியானம் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

RELATED ARTICLES

சமீபத்திய செய்திகள்